இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்காக 08 பெண்கள் தெரிவு
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்காக இம்மறை 08 பெண்கள் தெரிவு செய்யப்பட்டள்ளனர்.
இவர்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் முதித்தா சொய்சாவுடன் அதே மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் தலத்தா அதுகோரள ஆகியோர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சார்பில் கேகாலை மாவட்டத்திலிருந்து ரஜீகா விக்ரமசிங்க கம்பஹா மாவட்டத்திலிருந்து சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே ஆகியோருடன் கோகிலா குணவர்தனவும் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர்களுடன் காலி மாவட்டத்திலிருந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட சிரேஷ்ட நடிகை கீதா குமாரசிங்க பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள அதேவேளை மாத்தளை மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியினூடாக போட்டியிட்ட ரோஹினி கவிரத்னவும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
Comments are closed.