தேசிய பட்டியல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் முரண்பாடு – வாக்குறுதி அளித்தபடி வழங்காவிடின் சுயாதீனமாக செயற்பட பங்காளிக்கட்சிகள் முடிவு

ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த 7 தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பாக நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கென நியமிக்கப்படும் ஏழு பேர் யார் என்பது தொடர்பாக கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

வாக்குறுதியளிக்கப்பட்ட படி தேசிய பட்டியல் உறுப்பினர்களை பெற்று தர தவறினால் தமது கட்சியின் 15 உறுப்பினர்களுடன் சுயாதீனமாக செயற்பட போவதாக ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், மனோ கணேசன் ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்திக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பான முடிவு அடுத்த ஓரிரு நாட்களுக்குள் எடுக்கப்படுமென ஹரின் பெர்ணான்டோ நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, அபே ஜனபல கட்சி, இலங்கை தமிழரசு கட்சி ஆகியன தமது தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ளன.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சுரேன் ராகவன் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர் என தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசமிடம் வினவிய போது சுரேன் ராகவன் தனது இரட்டை பிரஜாவுரிமையை விலக்கிக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Comments are closed.