கொரோனாவால் பிரபல தயாரிப்பாளர் மரணம்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த முன்னணி தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன் (67-வயது) சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணித்தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று தான் லட்சுமி மூவி மேக்கர்ஸ். கே.முரளிதரன், வி.சுவாமிநாதன் மற்றும் ஜி.வேணுகோபால் என மூவர் இணைந்து இந்தத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தி வெற்றிப்படங்களை தயாரித்து வந்தனர்.
இந்நிலையிலேயே கொரோனா தொற்றுக்கு உள்ளான தயாரிப்பாளர் சுவாமிதான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். தமிழ்த் திரையுலகில் நிகழ்ந்த முதல் கொரோனா மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.