கட்சியின் செயலாளரை காணவில்லை, ஞானசார தேரர் எம்பியாவதில் சிக்கல்

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொது செயலாளர் வெதனியகம விமலதிஸ்ஸ தேரர் காணாமல் போனதாக கூறப்படும் நிலையில் ஞானசார தேரரின் தேசிய பட்டியலை உறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறித்த செயலாளரை கண்டறிய உதவுமாறு கட்சி உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

இது தொடர்பில் எங்கள் மக்கள் சக்தி கட்சி உறுப்பினர் ஆனந்த சாகர தேரர் பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று (10) நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவிக்கையில்,

“ஞானசார தேரர் நாடாளுமன்றம் செல்வதை தடுப்பதற்கு சர்வதேச மற்றும் உள்ளக மட்டத்தில் சூழ்ச்சிகள் நடைபெறுகிறது. எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் வெதனியகம விமலதிஸ்ஸ தேரர் காணாமல் போயுள்ளார். இதன்காரணமாக தேசிய பட்டியல் விவகாரத்தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

எங்கள் மக்கள் சக்தி கட்சி 17 தேர்தல் மாவட்டங்களில் போட்டியிட்டு 67 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளோம். எமது கட்சிக்கு தேசிய பட்டியல் ஊடாக ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு ஆசனத்தை ஞானசார தேரருக்கு வழங்க வேண்டும் என கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்தத நிலையில் கட்சியின் செயலாளர் காணாமல் போயுள்ளமை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

Comments are closed.