புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செயலமர்வு
பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 3 நாள் செயலமர்வினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல்த்தவல தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்
பாராளுமன்ற சிறப்புரிமைகள், பாராளுமன்ற வரலாறு, நிலையியற்கட்டளைகள் மற்றும் உறுப்பினர்களின் பொறுப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவதே இதன் நோக்கம் என்று தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டவுடன் இந்த பயற்சி செயலமர்வுக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளவர்களுள் 60 க்கும் மேற்பட்டோர் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று தேசிய பட்டியலிலும் பல புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரையில் இடம்பெற்றுள்ளனர். இதற்கவைமாக இதுவரையில் புதிய பாராமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 78 ஆகும்
Comments are closed.