சுயவிபரக் கோவையை கையளித்தார் மகிந்த
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது சுயவிபரக் கோவைத் தகவல்களை பாராளுமன்ற பொதுச் செயலாளர் காரியாலத்திற்கு வழங்கியுள்ளார்.
அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னர் பாராளுமன்றத்தினால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தயாரிக்கப்பட்டுள்ள இணையத்தளம் ஊடான விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
பிரதமரினால் விண்ணப்படிவம் பூர்த்தி செய்யப்படும் போது பாராளுமன்ற பொது செயலாளர் தம்மிக்க தசநாயக்க, உதவி பொது செயலாளர் டிகிரி ஜயதிலக்க உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
எதிவரும் 20 ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களை ஒன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வசதிகளை பாராளுமன்ற பொதுச் செயலாளர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். நேற்றய தினம்
Comments are closed.