பிள்ளையானால் அமைச்சு பொறுப்பை ஏற்க முடியவில்லை.

சட்ட அனுமதி கிடைக்காமையால் இன்று பிள்ளையானால் அமைச்சு பொறுப்பை ஏற்க முடியவில்லை.

இன்று கண்டியில் நடைபெற்ற அரச அமைச்சுகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் தேர்வான சந்திரகாந்தன் (பிள்ளையான்) பங்கு கொள்ளாமைக்கு அவர் விண்ணப்பித்த சட்ட அனுமதி கிடைக்காமையே காரணம் எனத் தெரிய வருகிறது.

அவருக்கான அனுமதி கிடைத்த பின் ஜனாதிபதியை சந்தித்து அவருக்கான அமைச்சு பொறுப்பை பெற்றுக் கொள்வார் என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.