திலகருக்கு முகநூலிலேயே தேசியப் பட்டியல் கிடைக்கும் – திகா

தமிழ் முற்போக்குக் கூட்டணியின்  திலகராஜ்க்கான தேசிய பட்டியலை முகப்புத்தகமும் ஊடகங்களும் பெற்றுக் கொடுக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி கட்சியான தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கான தேசிய பட்டியல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ப.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் மேலும்,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் என்னுடையக் கட்சிக்காரர். அவருக்கு தேசிய பட்டியல் வழங்குவேன் என நான் உறுதியளித்திருந்தேன். ஆனால், தேர்தல் காலத்தில் திலகராஜ், என்னுடன் கதைக்கவும் இல்லை. எங்களுக்கு வேலை செய்யவும் இல்லை.

ஊடகங்களிடமும் முகப்புத்தகத்திலுமே அவர் பேசிக்கொண்டிருந்தார். எனவே, ஊடகங்களிடமும் முகப்புத்தகத்திலும் தேசிய பட்டியலை கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும். என்னிடம் கேட்டிருந்தால் தந்திருப்பேன். எங்களை வெற்றிபெறச் செய்யாதவருக்கு, தேசிய பட்டியலை எவ்வாறு வழங்குவது?

தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு தேசிய பட்டியல் கிடைக்கப்பெற்றால், அதை யாருக்கு வழங்குவதென, கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தீர்மானிப்பார்– என்றார்.

Comments are closed.