சஜித் அணியின் தேசியப் பட்டியலில் மனோ, ஹக்கீம், ரிஷாத் அணிகளுக்கு இடமில்லை
சஜித் அணியின் தேசியப் பட்டியல் ஆசனச் சண்டை முடிவுக்கு வந்தது
7 பேரின் பெயர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மனோ, ஹக்கீம், ரிஷாத் அணிகளுக்கு இடமில்லை
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனங்கள் தொடர்பாக கட்சிக்குள் நிலவிய இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.
அதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக ரஞ்சித் மத்துமபண்டார, இம்தியாஸ் பாகிர் மாகார், திஸ்ஸ அத்தநாயக்க, ஹரீன் பெர்னாண்டோ, மயந்த திஸாநாயக்க, எரான் விக்கிரமரத்ன மற்றும் டயனா கமகே ஆகிய 7 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பெயர்ப்பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அனுப்பிவைத்துள்ளார்.
சஜித் அணியின் பங்காளிக் கட்சிகளான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய தமிழ், முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் எவருக்கும் தேசியப் பட்டியலில் எந்தவொரு ஆசனமும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.