ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – அமைச்சர் நிமல்

ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
தொழில் அமைச்சில் நேற்றைய தினம் கடமைகளை ஆரம்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனது அமைச்சானது தொழிலாளர்களுக்காக சேவையாற்றும் இடமாக அன்றி தொழில் வழங்குநர்களுக்கான நிறுவனமாக இருக்கக் கூடாது என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழிலாளர்களின் நெருக்கடிகள், கூட்டுத்தாபனங்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதனையும் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா இதன் போது தெரிவித்தார்.
Comments are closed.