அங்கொட லொக்காவினுடைய பெற்றோர்களின் மரபணு இந்தியாவிற்கு

அங்கொட லொக்கா என்றழைக்கப்படுகின்ற மத்துமகே சந்தன லசந்த பெரேராவின் பெற்றோரது மரபணு மாதிரிகளை இந்தியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அங்கொட லொக்காவின் தந்தை மத்துமகே லயனல் பெரேரா> மற்றும் தாய் சந்திரிக்கா பெரேரா ஆகியோரது மரபணு மாதிரிகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சர்வதேச பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் நகரில் பிரதீப் சிங் என்ற பெயரில் வசித்து வந்த அங்கொட லொக்கா இந்த வருடம் பெப்ரவரி மாதம் கோயம்புத்தூர் பாலாஜி நகருக்கு சென்றுள்ள அதேவேளை அவர் அங்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் தனது முகத்தின் தோற்றத்தை மாற்றியமைத்தமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அங்கொட லொக்காவின் மரண வழக்கில் கைதான மூவரையும் மூன்று நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க, கோயம்புத்தூர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.