ஷாங்காய் – ஸ்ரீலங்கள் விமான சேவையை இடைநிறுத்த சீனா நடவடிக்கை
ஸ்ரீலங்கன் விமான சேவை உள்ளிட்ட மூன்று விமான சேவைகளுடன் ஷங்காய்க்கான விமானப் போக்குவரத்தை இடைநிறுத்துவதற்கு, சீனாவின் சிவில் விமான சேவை ஒழுங்குபடுத்தல் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த விமான சேவைகளூடாக சீனாவிற்கு அழைத்துச்செல்லப்பட்ட பயணிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் UL 866 விமானத்தில் கடந்த 7 ஆம் திகதி பயணித்த 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சீனாவின் சிவில் விமான சேவை கட்டுப்பாட்டுச் சபையை மேற்கோள் காட்டி Xinhua செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
Etihad விமான சேவையின் EY 862 விமானத்தில் ஆகஸ்ட் மூன்றாம் திகதி பயணித்த மூன்று பேருக்கும், China Eastern விமான சேவையில் ஆகஸ்ட் ஐந்தாம் திகதி பயணித்த பயணிகளில் ஆறு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தி சேவை சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால், ஸ்ரீலங்கன் விமான சேவையின் கொழும்பு மற்றும் ஷாங்காய்க்கு இடையிலான விமானப் போக்குவரத்து ஒரு மாதத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளதாக Xinhua செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
ஏனைய இரண்டு விமான சேவைகளின் விமானப் போக்குவரத்து ஒரு வாரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளதாக சீனாவின் சிவில் விமான சேவை ஒழுங்குபடுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments are closed.