பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டில் தளர்வு

200 மாணவர்களுக்கு மேற்பட்ட பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

200 க்கும் அதிகமான மாணவர்களைக்கொண்ட பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வில் பல்வேறான தர மாணவர்களுக்கு வாரத்தில் பல்வேறான தினங்கள் கல்விக்கென ஒதுக்கப்பட்டிருந்தன.

இருப்பினும் இந்த வரையறையில் தளர்வை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கு அமைவாக சுகாதார சிபாரிசுக்கு அமைய பாடசாலைகளை முன்னெடுக்க முடியுமாயின் வழமை போன்று மாணவர்களை அழைப்பதற்கு பாடசாலை அதிபர்களுக்கு எந்தவித தடையும் இல்லையென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Comments are closed.