விசேட பொலிஸ் அதிகாரங்களை வடக்குக்கு ஒருபோதும் வழங்கோம் : சரத் வீரசேகர

வடக்கு மாகாணத்துக்கு என விசேட பொலிஸ் அதிகாரங்களை ஒருபோதும் வழங்கப்போவதில்லை என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

தனது இராஜாங்க அமைச்சுக் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கு மாகாணத்துக்கென விசேட பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் பொலிஸ் துறை பிளவுண்டு போகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே, வடக்கு மாகாணத்துக்குக் காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கப்போவதில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Comments are closed.