அமைச்சர்களுக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்படும் : வேலையைக் காட்டவில்லை என்றால் அவுட்!
அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள கெபினட் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் முதல் ஆறு மாதங்களில் அவர்கள் மேற்கொள்ளும் முன்னேற்றம் குறித்து ஆராயவதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முடிவு செய்துள்ளார். அதன்படி, அனைத்து அமைச்சர்களின் பங்கு குறித்த அறிக்கை ஆறு மாதங்களுக்குப் பிறகு பெறப்பட்டு பரிசீலிக்கப்படும்.
ஆறு மாதங்களில், அரச வேலைத்திட்டத்தை செயல்படுத்த அந்தந்த அமைச்சர்கள் அளித்த பங்களிப்பு, கொடுக்கப்பட்ட இலக்குகளை அடைதல் மற்றும் அந்தந்த அமைச்சகங்கள் அடைந்த முன்னேற்றம் ஆகியவை ஆராயப்படும்.
அரசாங்கத்தின் மற்றும் அமைச்சின் நோக்கங்களை அவர்கள் நிறைவேற்றத் தவறினால் அவர்களை உடனடியாக பதவியில் இருந்து நீக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Comments are closed.