திடிரென ஓய்வை அறிவித்த இந்திய பிரபலங்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு டோனி ரசிகர்களை நிலை குலைய வைத்த அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் சென்னை சுப்பர்கிங்ஸ்ன் வீரருமான சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்து கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
நேற்று மாலை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “தான் ஓய்வு பெறுவதாக” பகிர்ந்தார் மகேந்திர சிங் டோனி. அவர் அறிவிப்பு தந்த அதிர்ச்சியிலிருந்து ரசிகர்கள் மீள்வதற்குள், சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.