தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு பிரியாணி விருந்து வைத்தார் ரணில்
நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்றது.
சிநேகபூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட உறுப்பினர்களுக்குப் புரியாணியும் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் முடிவடையும் வரை தானே தலைமைப் பதவியில் நீடிப்பார் என ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
“கட்சித் தலைமைப் பதவியில் நீடிப்பதற்கே ரணில் விக்கிரமசிங்க விரும்புகின்றார். எமக்குப் பிரியாணியும் வழங்கினார். ஆனால், நான் வாங்கவில்லை. அவர் தலைமைப் பதவியில் இருந்தால் மாகாண சபைத் தேர்தலில் நாம் போட்டியிடமாட்டோம்” என்று கூட்டத்தில் பங்கேற்ற சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
Comments are closed.