9 ஆவது பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு

எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள 9 ஆவது பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள தெரிவு செய்யப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரினால் வர்த்தமானியில் பெயர் வெளியிடப்பட்ட 223 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொலை சாட்டுக்களுடன் தொடர்புடைய இருவர் (சிவநேசத்துரை சந்திரகாந்தன், பிரேமலால் ஜயசேகர) கடந்த பொதுத் தேர்தலில் போட்டிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர்கள் சிறைச்சாலைகளில் உள்ளனர்.
எனினும் நீதிமன்ற அனுமதியின் பேரில் இவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என இதுவரை முடிவுகள் அறிவிக்கப்படாது உள்ளன.
9 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு தொடர்பிலான மேலுதிக தகவல்களை பாராளுமன்ற இணைத்தளத்தின் ஊடாக அறிந்து கொள்ள முடியும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
Comments are closed.