பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கவுள்ள யாழ் மாநகர சபை

யாழ் மாநகர சபைக்கு  இவ்வருடம் அதிக நிதி நெருக்கடிநிலைமை காணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் நா.லோகதயாளன் தெரிவித்தார்
யாழ்ப்பாண மாநகரசபை2020 ம்  ஆண்டு மிக அதிக நிதி நெருக்கடியை சந்திக்க கூடிய ஆண்டாக காணப்படுகின்றது. கொரோனா சூழ்நிலை  காரணமாக யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான சுமார் 349 கடைகளுக்கான இரண்டு மாத வாடகையினை சலுகை அடிப்படையில்  விலக்களிப்பு  அளிக்கப்பட்டுள்ளது.
இம்முறை நல்லூர்க் கந்தன் ஆலய உற்சவ காலத்தில் தற்போதைய கொரோனா சூழ்நிலை காரணமாக கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக  மாநகர சபைக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது நல்லூர் ஆலய உற்சவத்தின் போது யாழ்ப்பாண மாநகர சபைக்கு வருடாந்தம் 1கோடி 50 லட்சம் வருமானம் கிடைக்கின்ற போதும் சபை ரீதியான செயற்பாடுகளுக்காக சுமார் 70 லட்சம் செலவு செய்யப்படுவது வழமை
எனினும் இந்த முறை நல்லூர் உற்சவ காலத்தில்  அனைத்து செலவுகளையும்  சபையே பொறுப்பேற்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. ஏனைய துறைகளை எடுத்துக்கொண்டால் சந்தை வருமானம் போன்ற ஏனைய வருமானங்களும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக குறைந்தளவாகவே  சபைக்கு கிடைத்துள்ளது.
  இவ்வாண்டு பெரும் நிதிநெருக்கடியினை எமது மாநகரசபைக்கு ஏற்படுத்தியுள்ளது இதன் தாக்கம் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் தான் வெளிப்படும்.
 இது தொடர்பில்  மாநகர சபை  முதல்வர் ஏனைய தரப்பினருடனும் ஆராய்ந்து ஒரு நிர்வாக ரீதியான முடிவுகளை  எடுக்கவுள்ளார். அத்தோடு  மேலதிகமாக ஏதாவது நிதி மூலங்களைதேடுவதா அல்லது நிலையான சேமிப்பில் இருக்கிற பணத்தை எடுத்து செலவழிப்பதா எவ்வாறு இந்த நெருக்கடியை சமாளிப்பது தொடர்பில் நாம் முதல்வருடன் விரைவில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வுள்ளோம் என்றார்.

Comments are closed.