3 அமைச்சுகளின் கடமைகளையும் பொறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நேற்று தனது மூன்று அமைச்சுகளின் கடமைகளையும் பொறுப்பேற்றார்.
மத வழிபாடுகளுடன் இடம்பெற்ற பிரதமரின் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சு, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுகளுக்குப் பொறுப்பாகவுள்ளார்.
குறித்த மூன்று அமைச்சுகளிலும் தனது கடமைகளை அவர் நேற்றுப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
Comments are closed.