மஞ்சள் தட்டுப்பாடு விரைவில் நிவர்தி
நாட்டில் மஞ்சளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை ஒன்றரை வருடங்களுக்குள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிறுதோட்ட பயிர் அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் மஞ்சள் செய்கையை விஸ்தரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யக்கூடிய அளவில் மஞ்சள் காணப்படுகிறதா? இல்லையா? என்பது தொடர்பில் தற்போது ஆராயப்படுகிறது.
விலையை அதிகரிக்கும் வரை மஞ்சள் மறைத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது. நாட்டில் மஞ்சளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை ஒன்றரை வருடங்களுக்குள் நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம், என்றார்.
Comments are closed.