நியூசிலாந்தின் பொது தேர்தல் 4 வாரங்களுக்கு ஒத்தி வைப்பு

நியூசிலாந்தின் பொது தேர்தல் 4 வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்படவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஏர்டன் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்படுதத்தப்பட்டிருந்த நியூசிலாந்தில் கடந்த சில நாட்களில் தொடர்ச்சியாக வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர.
இதன் காரணமாக செப்டம்பர் 19 ஆம் திகதி நடைபெறவிருந்த பொது தேர்தலை ஒக்டோபர் 17 ஆம் திகதி பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் தேர்தல் சட்டத்திட்டங்களுக்கு அமைய நவம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னர் நியூசிலாந்தில் பொது தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.