தொண்டமானின் வெவன்டன் இல்லம் இன்று அதிகாலை தீயில் எரிந்து நாசம்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரான முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கொத்மலை வெவன்டன் இல்லத்தில் தீ பரவியுள்ளது.
இன்று அதிகாலை இந்தத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இதன்போது நுவரெலியா மற்றும் ஹட்டன் நகர சபை தீயணைப்பு பிரிவினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தீயால் அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தின்போது காவலாளி மட்டுமே அங்கிருந்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
தீ எப்படிப் பரவியது என்பது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Comments are closed.