உற்பத்தித்திறன் தொடர்பான பயிற்சிநெறி முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.

மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில், புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான “உற்பத்தித்திறன்” தொடர்பான இரு நாட் பயிற்சி நெறியின் முதற் கட்ட பயிற்சி வகுப்பு இன்று (18.08.2020) மாவட்ட செயலாளர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இப் பயிற்சி நெறியின் வளவாளர்களாக மாவட்ட செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் க.லிங்கேஸ்வரன் மற்றும் கணக்காளர் ரா.றாஜூவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செயலக மனிதவள மேம்பாட்டு பிரிவு மண்டபத்தில் மு.ப 8.30மணி தொடக்கம் பி.ப 4.00மணிவரை நடைபெற்றுள்ளதுடன், எதிர்வரும் வியாழக்கிழமை இரண்டாம் நாட்பயிற்சி நெறி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments are closed.