வெளிநாட்டுப் பிரஜைகளின் வீசா காலம் மேலும் நீடிப்பு

இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் வீசா அனுமதி காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது
இதற்கமைய, இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து விதமான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் ஜூலை மாதம் 11 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த மார்ச் மாதம் 07 ஆம் திகதிக்கும், எதிர்வரும் ஜூலை மாதம் 11 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், காலாவதியாகும் வீசாக்களுக்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நாட்டிலிருந்து வெளியேற விரும்புவோர் வீசா நீடிப்புடன் தொடர்புடைய வீசா கட்டணங்களை விமான நிலையத்தில் செலுத்தி வெளியேற முடியும் எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது
Comments are closed.