இளையோரினால் பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகள் தூய்மையாக்கல்.
யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்கரைப் பகுதியில் 15 அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 150 இளையோரினால் பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகள் தூய்மைப்படுத்தப்பட்டது.
1. 2km கடற்கரைப் பகுதியிலிருந்து 160 மேற்பட்ட பைகளில் பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு மீள் சுழற்சிக்கு வழங்கப்பட்டது.
2. எதிர்காலத்தில் சூழலியல் சார் செயற்பாடுகளில் இணைந்து செயற்படல் மற்றும் கருத்துருவாக்க தளத்திற்கான அடித்தளம் உருவாக்கம்.
3. இளையோர் பலர் பிரதேச, நிறுவன எல்லைகளுக்கு அப்பால் ஒரு நோக்கத்தில் சமூகமாக ஒன்றிணைவும் சமூகமாக சிந்தித்தலும் சாத்தியமாகியது.
4. சுற்றுச்சூழல் தூய்மை மற்றும் பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பிலான பாரிய விழிப்புணர்வும் தனிமனித மாற்றத்திற்கான எண்ணம் செயற்பாட்டின் ஊடாக உருவாக்கம் பெறுகின்றது.
5. சமூக வலைத்தளங்கள் ஊடாக செயற்றிட்ட விடயங்கள் பாரிய அளவில் விளம்பரப்படுத்தப்படுவதால்; வெவ்வேறு பிரதேசங்களில் சூழல் சார் செயற்பாட்டாளர்களின் உருவாக்கமும் செயற்பாடுகளும் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது.
Comments are closed.