என்னை எவரும் கடத்திச் செல்லவோ அல்லது காணாமல் ஆக்கச் செய்யவோ இல்லை – அத்துரலிய ரதன தேரர்

ன்னை எவரும் கடத்திச் செல்லவோ அல்லது காணாமல் ஆக்கச் செய்யவோ இல்லையென சங்கைக்குரிய அதுரெலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
பொது தேர்தலில் அபே ஜனபல கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் உறுப்பினரை தெரிவு செய்வதில் நெருக்கடி நிலை தோன்றியது. இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை.
கட்சியின் முன்னாள் செயலாளர் சங்கைக்குரிய வேதெனிகம விமலதிஸ்ஸ மற்றும் சங்கைக்குரிய அதுரெலிய ரத்தன தேரர் ஆகியோர் காணாமல் போயுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. அது தொடர்பாக பதிலளிக்கும் வகையில் சங்கைக்குரிய அதுரெலிய ரத்தன தேரர் ஊடகவியலாளார் சந்திப்பை நடத்தி இருந்தார்.
தான் காணாமல் போனதாக கூறப்படும் விடயம் ஊடகங்களில் வெளியாகி இருந்தமை குறித்து கவலையடைவதாக தேரர் இதன் போது தெரிவித்தார்.
தன்னை போன்ற பிரபல்யமான ஒருவருக்கு அவ்வாறு மறைந்திருக்க முடியாதென சுட்டிக்காட்டிய தேரர், கடந்த பல நாட்களாக தான் இரவு நேரத்தில் சதஹம்செவன நிலையத்திலேயே தங்கி இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஆதலால் தன் மீது சுமத்தப்படும் இவ்வாறான செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடத்தல் குறித்து வெளியாகி இருக்கும் எந்தவொரு விடயத்துடனும் தான் சம்பந்தப்படவில்லை எனவும் சங்கைக்குரிய அத்துரலிய ரதன தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments are closed.