முகப்புத்தகத்தினால் இந்தியாவில் பாரிய நெருக்கடி
முகப்புத்தக சமூக வலைத்தளம் காரணமாக இந்தியாவில் பாரிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முகப்புத்தக சமூக ஊடக வலையமைப்பு இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதாகட்சிக்கு ஆதரவாக செயற்படுவதாக அமெரிக்க பத்திரிகையொன்று வெளியிட்ட தகவலையடுத்து இந்நெருக்கடி உக்கிரமடைந்துள்ளது.
அமெரிக்காவின் வோல்ட் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகை இது தொடர்பாக தெரிவிக்கையில் முகப்புத்தின் ஊடாக இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளர்களின் குரோத கருத்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென தெரிவித்துள்ளது.
இச்செய்தியை அடுத்து தன்மீது தொலைபேசி மற்றும் இணையத்தளம் ஊடாக மரண அச்சுறுத்தல் மேற்கொள்ளப்படுவதாக முகப்புத்தின் நிறுவனத்தின் இந்திய நிறைவேற்று அதிகாரியொருவர் புதுடில்லி பொலிசில் முறைப்பாடொன்றையும் பதிவுசெய்துள்ளார்.
இச்செய்தி வெளியானதை அடுத்து காங்கிரஸ் கட்சியும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன் பிரதமர் நரேந்திர மோதியின் பாராதிய ஜனதா கட்சி இந்தியாவில் சமூக ஊடக வலைத்தளங்களை அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப கையாள்வதாக தெரிவித்துள்ளது.
Comments are closed.