வேலைவாய்ப்பு நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளை அழைக்கிறது யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்
அரச வேலைவாய்பிற்காக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக பழைய மாணவர்களுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
ஐம்பதாயிரம் வேலைவாய்ப்பில் விண்ணப்பித்தவர்களில் ஊழியர் சேமலாபநிதியினை பெறுபவர்களாகக் காரணம் காட்டி நிராகரிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக பழைய மாணவர்களையே எதிர்வரும் வெள்ளிக்கிழமை(21) காலை 10மணிக்கு மாணவர் ஒன்றிய கலந்துரையாடல் அறையில் ஒன்று கூடுமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.
Comments are closed.