மணல் அகழ்வை தடுக்க இரராணுவத்தின் உதவி கோரிய அரசாங்க அதிபர்

மண் அகழ்வினை தடுப்பதற்கு இராணுவத்தினரின் உதவி பெறப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

சட்டவிரோத மண் அகழ்வினை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

கண்டாவளை பிரதேசத்தில் பிரதேச செயலாளரின் நேரடி நடவடிக்கைகளினால் இயலுமானவரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது, இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் சந்திப்புக்களில் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளது, என்றார்.

Comments are closed.