நுரைச்சோலை செயலிழந்தமையால் தினசரி 700 கோடி ரூபா இழப்பு – இலங்கை மின்சார வாரிய பொது ஊழியர் சங்க தலைவர்
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயல்படாமையால் , அதன் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் பெற வேண்டி உள்ளது என இலங்கை மின்சார வாரியத்தின் (சி.இ.பி.)பொது சங்க ஊழியர் சங்க தலைவர் மாலக விக்ரமசிங்க தெரிவித்தார்.
“நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றன. 10 ஆண்டுகளில் அதை எம்மால் பராமரிக்க முடிய வேண்டும். ஆனால் இன்று நம்மிடம் அந்த திறன் இல்லை என்பதைக் காண்கிறோம். ஏதாவது நடக்கும்போது சீனாவின் உதவியை நாட வேண்டும். எனவே, அது ஒரு கடுமையான பிரச்சினையாக உள்ளது என்றார் அவர்.
லக்விஜய மின்நிலையத்தின் மூன்று கட்டங்களும் மூடப்பட்டுள்ளன, ஏனெனில் 17 ஆம் தேதி ஒரு பகுதி டிரிப் ஆகி மின் தடை ஏற்பட்டது. அந்த அமைப்பை செயல்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நேரம் அதிகரித்தது. எனவே ஒரு பகுதி துண்டிக்கப்பட்டதனால் மேலும் இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் மின்நிலையத்தை மீண்டும் செயல்படுத்த சில நாட்கள் ஆகும். பின்னர் அந்த சில நாட்களுக்கு டீசலில் இருந்து மின்சாரம் வாங்க வேண்டும். இதனால் நாடு ஒரு நாளைக்கு சுமார் 700 கோடி ரூபாயை இழந்து வருகிறது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் ஒரு காற்றாலை உள்ளது. 60 மெகாவாட் மின்சாரம் காற்றாலையால் உற்பத்தி செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு, அங்கு ஒரு மின்மாற்றி வெடித்தது. எனவே, அதிலிருந்து 60 மெகாவாட் மின்சாரம் வரவில்லை. இந்த மின்மாற்றி ஏன் வெடித்தது? என தேடினால் அது சரியாக பராமரிக்கப்படவில்லை, எனத் தெரிய வந்துள்ளது ”என்று ஊடகங்களுக்கு மாலக விக்ரமசிங்க தெரிவித்தார்.
Comments are closed.