கோண்டாவில் புகையிரத நிலைய களஞ்சியத்திலிருந்து ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருட்டு

கோண்டாவில் புகையிரத நிலைய களஞ்சியம் உடைக்கப்பட்டு ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோண்டாவில் புகையிரத நிலையத்தின் களஞ்சியசாலையை உடைத்த திருடர்கள் அங்கிருந்த பெறுமதியான பொருட்களை களவாடியுள்ளனர்.
நேற்றைய தினம் களஞ்சிய சாலையை புகையிரத திணைக்கள பணியாளர்கள் பார்வையிட்ட போதே அது உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டமையை அறிந்துள்ளனர். களவாடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் ஒரு இலட்சம் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் புகையிரத திணைக்களத்தால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Comments are closed.