அமெரிக்க மக்களது எதிர்ப்பின்ஏதிரொலியாக ‘மினியாபோலிஸ்’ காவல் துறையை கலைக்க முடிவு
ஜார்ஜ் ஃபிலாய்ட் என்ற கறுப்பின அமெரிக்கரின் மரணத்துடன் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்கா முழுவதும் 13 வது நாளாக தொடர்கின்றன. இந்த ஆர்ப்பாட்டங்கள் பொதுவாக இனவெறிக்கு எதிரானவை, உலகெங்கிலும் உள்ள இனவெறிக்கு எதிரான சமூக குழுக்கள் அமெரிக்க கிளர்ச்சியாளர்களை ஆதரிக்க முன்வந்துள்ளன.
இதற்கிடையில், மினியாபோலிஸ் நகராட்சி மன்றம் மினியாபோலிஸ் காவல் துறையை கலைக்க முடிவு செய்துள்ளது. பெருகிய எதிர்ப்பின் மத்தியில் இந்த நடவடிக்கை வந்துள்ளது, மேலும் பொது பாதுகாப்புக்காக ஒரு புதிய மாதிரியை உருவாக்க தயாராகி வருவதாக நகர சபை தெரிவித்துள்ளது.
காவல் துறையை கலைக்கும் பிரேரணை பெரும்பான்மை வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Comments are closed.