12 மாவட்டங்களில் ஒத்திகை தேர்தல்
பன்னிரண்டு மாவட்டங்களை உள்ளடக்கி எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒத்திகை தேர்தலை நடாத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிமுறைகளை பின்பற்றும் நோக்கில் இந்த ஒத்திகை முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை, கொழும்பு, களுத்துறை, அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் ஒத்திகைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன்சிறி ரத்நாயக்க குறிப்பிட்டார்.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றும் போது வாக்களிப்பு நிலையங்களில் எதிர்நோக்கக்கூடிய சிக்கல்களை அடையாளம் காண்பதே இதன் நோக்கம் என சமன்சிறி ரத்னாயக்க தெரிவித்தார்.
சமூக இடைவௌியை பேணுதல், முகக்கவசங்களை அணிதல், கிருமிநாசினிகளை பயன்படுத்துதல், தேசிய அடையாளஅட்டைகளை கையில் தொடாது பயன்படுத்துதல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதலும் ஒத்திகையில் முன்னெடுக்கப்படவுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பலாங்கொடையில் பொதுத் தேர்தலுக்கான ஒத்திகை முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் இன்று (09) வழங்கப்படவுள்ளன.
நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் பின்னர் அறிக்கை ஒன்றினூடாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இந்த விடயத்தை தௌிவுபடுத்தியுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலை நடாத்துவதற்கான திகதி தொடர்பில் எதிர்வரும் 12 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
Comments are closed.