காணிப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு! – மன்னார் ஆயரிடம் ஜனாதிபதி வாக்குறுதி.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடெல்ஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை உள்ளிட்ட குழுவினர் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தனர்.
இதன்போது மன்னார் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் விளக்கமளிக்கப்பட்டன.
அவை தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
மடு யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவது தொடர்பிலும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் அருட்தந்தை ஜொய்ஸ் பெப்பி சொசாய், அருட்தந்தை ஆண்டனி சொசாய் உள்ளிட்ட அருட்தந்தையர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.