இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று கொழும்பு வருகிறார்
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று (19) திடீரென இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு நாட்களும் இலங்கையில் தங்கவுள்ள தோவல், ஜனாதிபதி மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் சிலருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் நாளை மறுதினம் (20) நடைபெறவுள்ளது.
டோவல் திடீரென இலங்கைக்கு இந்திய அரசின் சிறப்புச் செய்தியை வழங்கும் நோக்கத்தில் வருகிறாரா அல்லது இலங்கை அரசின் சிறப்புச் செய்தியை இந்தியாவுக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்தில் வருகிறாரா என்பது தெரியவில்லை.
எனினும், கடந்த சில மாதங்களாக, அரசாங்கத்தில் உள்ள பல்வேறு தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் , இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய பல தடவைகள் முயற்சித்து வந்தனர், ஆனால் பிரதமர் மோடி அதற்கு நேரம் கொடுக்காததால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. .
இந்த நாட்டிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக மட்டுமன்றி இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் பதவியை வகிக்கும் மிலிந்த் மொரகொட ஊடாகவும் ஜனாதிபதி நேரத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.
கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் தொலைபேசியில் உரையாடி ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதுவும் பலனளிக்கவில்லை.
பின்னர், அஜித் தோவாலின் மகன் சௌர்ய தோவல், கடந்த வாரம் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த நிலையில், இது தொடர்பில் கேள்விப்பட்ட ஜனாதிபதி, அவரை நேரில் சந்தித்து, இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாட நடவடிக்கை எடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், இவ்வாறானதொரு பின்னணியில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலின் இலங்கைக்கான இரண்டு நாள் விஜயம் மிகவும் தீர்க்கமான ஒன்றாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.