சுற்றுலா விசாவில் வெளிநாடு செல்வதில் சிக்கல் : வருகிறது புதிய சட்டம்?
சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு செல்வது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இன்று (19) ஓமானில் மனித கடத்தலில் சிக்கியவர்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இவர்கள் விசிட் விசாவில் சென்றுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அங்கீகாரத்துடன்அல்ல. சுற்றுலா செல்வது போல் துபாய் அல்லது வேறு நாட்டிற்கு சென்று அங்கிருந்து ஓமன் நாட்டுக்கு சென்றுள்ளனர். இச்சம்பவத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தரம் பாராமல் உரிய நடவடிக்கை எடுப்போம். தற்போது விசிட் விசாவில் செல்வதை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்’’ என்றார் இராஜாங்க அமைச்சர்.