ஆண்டுக்கு ரூ.2½ லட்சம் வாங்கினால் வசதியானவரா? பிற வகுப்பினர் சலுகைகள் இழப்பதாக வழக்கு!

உயர் சாதியினருக்கு ரூ.8 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை பெற முடியும். ஆனால், பிற வகுப்பினருக்கு ரூ.2½ லட்சம் ஆண்டு வருமானம் இருந்தாலே சலுகைகளை இழக்கும் நிலை உள்ளதாக தொடர்ந்த வழக்கில் மத்திய நிதி அமைச்சகம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை இந்திய பாராளுமன்றத்தால் திருத்த முடியாது. இத்தகைய சூழ்நிலைகளில், இந்திய பாராளுமன்றம் அரசியலமைப்பு [103 வது திருத்தம் ] சட்டம், 2019 ஐ இயற்றியது.

இந்தத் திருத்தத்தின் மூலம், இந்திய நாடாளுமன்றம், தற்போதுள்ள இடஒதுக்கீட்டிற்கு மேலதிகமாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடிமக்களுக்கு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் அரசுப் பதவிகளில் நியமனம் பெற இடஒதுக்கீடு செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் அளித்தது. எனவே , பொருளாதாரத்தில் பின்தங்கிய குடிமக்களுக்கு 10% வரம்பு வரையிலான சேர்க்கை மற்றும் நியமனங்களில் 10 % இடஒதுக்கீடு ஒதுக்கீடு செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது . இந்சட்டம் சமூகத்தில் உயர் வகுப்பினர் பயண் பெரு ம் வகையில் அமைந்தது.

07.11.2022 தேதியிட்ட தீர்ப்பின் மூலம், அரசியலமைப்பில் உள்ள 103 திருத்தம் செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இதன்படி , கல்வி நிறுவனங்களின் சேர்க்கை மற்றும் அரசு நியமனங்களில் தற்போதுள்ள இடஒதுக்கீட்டிற்கு கூடுதலாக 10% இடஒதுக்கீட்டை பொருளாதாரத்தில் பின்தங்கிய குடிமக்களுக்கு வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை.

பொருளாதாரத்தில் பின் தங்கிய, உயர்வகுப்பினர் 10 சதவீத இட ஒதுக்கீடு பெற ரூ.7,99,999/- வரம்புக்கு குள் ஆண்டு வருமானம் இருக்க வேண்டும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், ஆண்டு வருமானம் வருடத்திற்கு ரூ.2,50,000/-க்கு மேல் இருந்தால் அனைவ ரும் வருமான வரி கட்ட வேண்டும் என உள்ளது. இது முரணாக உள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 265 வது பிரிவின்படி, சட்டத்தின் அதிகாரம் இல்லாமல் வரி விதிக்கவோ அல்லது வசூலிக்கவோ அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஆண்டு வருமானம் ரூ.7,99,999/- லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்ற விதிமுறையும், ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் க்கு மேல் உள்ள அனைவரும் வருமான வரி கட்ட வேண்டும் என்ற விதிமுறையும் முரணாக உள்ளது. பொருளாதார சமமின்மையை ஏற்படுத்தும்.

எனவே, ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள அனைவரும் வருமான வரி கட்ட வேண்டும் என்ற விதிமுறையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும், அல்லது வருமான வரி உச்ச வரம்பை ஆண்டிற்கு 8 லட்சமாக உயர்த்த வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் R.மகாதேவன், J.சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர் கோரிக்கை குறித்து மத்திய நிதி மற்றும் சட்டதுறை செயலாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரம் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.