வல்லைப் பாலத்தில் விழுந்த இளைஞர் மாயம்! – தொடர்கின்றது தேடும் பணி.
யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரேரியில் தவறி விழுந்து காணாமல்போயுள்ளார். அவரைத் தேடும் பணி இடம்பெற்று வருகின்றது.
புத்தூர், கலைமதி கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் லக்ஸன் (வயது 19) எனும் இளைஞரே காணாமல்போயுள்ளார்.
குறித்த இளைஞரும் அவரது நண்பர்கள் சிலரும் இணைந்து வல்லைப் பாலத்தில் நேற்று மாலை வேளையில் தூண்டில் போட்டு மீன் பிடியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்போது இளைஞர் பாலத்தில் இருந்து நீரேரிக்குள் தவறி விழுந்துள்ள நிலையில் அவரைத் தேடும் பணியில் அச்சுவேலிப் பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.