“புதுசா ஒரு மோசடி.. லிங்க க்ளிக் பண்ணா மொத்த பணமும் போய்டும்..” எச்சரிக்கும் தமிழ்நாடு டிஜிபி.!
நெட் பேங்கிங் குறித்து செல்போன் குறுஞ்செய்தியில் லிங்க் அனுப்பி மோசடி நடைபெறுவதாக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், நெட் பேங்கிங் சேவை முடிவடைய உள்ளதால் PAN நம்பரை அப்டேட் செய்ய, இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள் என்று வரும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
எந்த வங்கியும் இதுபோன்று குறுஞ்செய்திகளை அனுப்பவதில்லை என்று தெளிவுப்படுத்தியுள்ள அவர், லிங்க்கை கிளிக் செய்யும் நபர்களின் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் திருடும் மோசடி நடைபெறுவதால் எச்சரிக்கையாக இருக்குமாறு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.
இது பழைய மோசடி முறை எனவும் தற்போது இந்த முறையை சிலர் மீண்டும் கையிலெடுத்து ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.