கொடுங்கோண்மைக்கு எதிராகப் போராடி மாண்ட மாண்புகளை மறக்க மாட்டோம்! – மனோ பதிவு.
மா வீரர் நாளில் கிளிநொச்சி – கனகபுரம் துயிலும் இல்லத்தில் அலைகடலெனத் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் படத்தை இணைத்து தனது முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார் தமிழ் முற்போக்குக் கூ ட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி.
அந்தப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“இது 2022 நவம்பர் செய்தி படம். பல பக்க செய்திகளை இந்த ஒரே படம் சொல்கின்றது.
கொடுங்கோண்மைக்கு எதிராகப் போராடி மாண்ட மாண்புகளை மறக்க மாட்டோம் என்பது பிரதான செய்தி.
அரசியல் பிரமுகர்களை முன்னிலைப்படுத்தாமல், கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று இந்தச் செய்தி தெற்குக்கு கூறப்படுகின்றது.
இம்முறை நினைவேந்தல் நிகழ்வுகளைப் பெரும் கெடுபிடி இல்லாமல் நடக்க விட்டுள்ளார், ரணில்.
கொடுங்கோண்மையை மறக்க மாட்டோம்; ஆனால் மன்னிப்போமா என அந்த மக்களேதான் கூற வேண்டும்.
ரணில், இதை இந்த மக்களிம் நேரடியாகக் கேட்டு தெரிந்து கொள்வதற்கான பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும். அதன் பின்னர்தான் உண்மையான நல்லிணக்க செயன்முறை ஆரம்பமாக முடியும்.
ஜனாதிபதி ரணிலிடம் இதை நேரடியாகக் கூற விரும்புகின்றேன்” – என்றுள்ளது.