சைபர் திருட்டுக்கு அதிகம் இலக்காகும் மூன்றாவது நாடு இந்தியா : புதிய அறிக்கையில் தகவல்!
குறுஞ்செய்தி அல்லது மெயில் மூலம் கடவுச்சொற்களைத் திருடும் சைபர் குற்றவாளிகளின் சிண்டிகேட் சம்பந்தப்பட்ட உலகளாவிய சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 111 நாடுகளின் பட்டியலில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தையும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது என்று சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
சிங்கப்பூரில் உள்ள இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான குரூப் ஐபி இந்த ஆய்வை நடத்தியது. குரூப் IB இன் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 34 ரஷ்ய மொழி பேசும் சைபர் குற்றவாளிகள் டெலிகிராம் வழியாக தகவல் திருடும் மால்வேர்களை விநியோகித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது.
இன்போ ஸ்டீலர் எனப்படும் யுக்தி கொண்டு கடவுச்சொற்கள், கேமிங் கணக்குகள், மின்னஞ்சல் சேவைகள் மற்றும் சமூக ஊடகங்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள், கிரிப்டோ வாலட் தரவு மற்றும் குக்கீ கோப்புகளை இந்த மால்வேர் மூலம் சேகரித்து அதை ஆப்ரேட்டர்களுக்கு அனுப்பும்.
மோசடி செய்பவர்கள் திருடப்பட்ட தரவை டார்க் வெப் சந்தைகளில் தகவலை விற்று பணம் பெறுவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில், சிண்டிகேட் உலாவிகளில் இருந்து 11 கோடி குக்கீ கோப்புகளை இந்த முறையில் திருடியுள்ளனர்.
குக்கீ கோப்புகளைத் தவிர, சைபர் குற்றவாளிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய பயனர்களிடமிருந்து லட்சக்கணக்கான கடவுச்சொற்கள் மற்றும் ஆயிரக்கணக்கான நிதி உள்நுழைவு தரவுத் தொகுப்புகளையும் திருடியுள்ளனர். 2022 முதல் ஏழு மாதங்களில் மட்டும் 50 மில்லியனுக்கும் அதிகமான கடவுச்சொற்கள் திருடப்பட்டுள்ளன. திருடப்பட்ட தரவு மற்றும் அட்டை விவரங்களின் மதிப்பு டார்க் வெப் சந்தையில் சுமார் 5.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, ஆசிய-பசிபிக் நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்ட சாதனங்களை இந்தியா கண்டுள்ளது. உலகளவில், 2022ல் அடிக்கடி சைபர் தாக்குதலுக்கு உள்ளான முதல் ஐந்து நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ஜெர்மனி மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் உள்ளன.
“டெலிகிராம் குழுக்களின் பகுப்பாய்வின்படி, இந்தியாவில் 2021 ஆம் ஆண்டின் கடைசி 10 மாதங்களில் திருட்டு மால்வேர் 19,249 சாதனங்களை பாதித்தது, அதே நேரத்தில் 2022 இன் முதல் ஏழு மாதங்களில் எண்ணிக்கை 53,988 ஆக அதிகரித்து இருந்துள்ளது.
இந்த சாதனங்கள் மூலம் ஹேக்கர்கள் 117,645,504,550 குக்கீ கோப்புகள்,கடவுச்சொற்கள், 4,657 பேங்க் கார்டுகளின் விவரங்கள் மற்றும் 4,428 கிரிப்டோ வாலட் தகவல்கல்லை திருடியுள்ளதாக, குரூப்-ஐபியின் டிஜிட்டல் இடர் பாதுகாப்புக் குழுவின் தலைவர் இலியா ரோஷ்னோவ் கூறினார்.
இந்தியாவில், சைபர் குற்றவாளிகள் அடிக்கடி சேகரிக்கும் கடவுச்சொற்களில், திருடப்பட்ட கடவுச்சொற்களில் 32% அமேசான் கடவுச்சொற்களும் அடங்கும். PayPal 17% ஆக இருந்ததுள்ளது. எனவே உங்கள் தரவுகளை முழுமையாக இணைய முகவரிகளில் சேகரிக்காமல் கொஞ்சம் நினைவில் சேகரித்துகொண்டால் திருட்டில் இருந்து கொஞ்சம் தப்பித்துக் கொள்ளலாம்.