மூத்த ஊடகவியலாளர் இரகுநாதன் காலமானார்.
மூத்த ஊடகவியலாளர் பாலகிருஷ்ணன் இரகுநாதன் நேற்று தனது 70 ஆவது வயதில் காலமானார்.
யாழ்., வடமராட்சி, பருத்தித்துறை, ஆத்தியடியைச் சேர்ந்த இவர் தமிழ்ப் பத்திரிகைகள் பலவற்றில் பல ஆண்டுகள் பிரதேச ஊடகவியலாளராகப் பணியாற்றியிருந்த நிலையில், மூப்பின் காரணமாக பணியில் இருந்து ஓய்வெடுத்திருந்தார்.
பருத்தித்துறைக் கோட்டக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி ஓய்வுபெற்ற இவர், சிறந்த சமூக சேவையாளராகத் திகழ்ந்தார்.
இவரது இறுதிக்கிரியைகள் புலோலி – சாரையடியில் நேற்று மாலை நடைபெற்றது.
இறுதி நிகழ்வில் கல்விச் சமூகத்தினர், ஊடகத்துறையினர் எனப் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.