முல்லைத்தீவில் ”மண்டோஸ்” புயலின் தாக்கம்.
“மண்டோஸ்” புயல் முல்லைத்தீவு மாவட்டத்தில் பலத்த சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு பலத்த மழையுடன் வீசிய கடும்காற்றினால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்ததுவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் திரு லிங்கேஸ்வரகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று (09.12.2022) காலை 10 மணிவரையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 15 வீடுகள் பகுதியளவில் சேதமைடைந்தததுடன் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிழக்கு, ஆனந்தபுரம் முதலிய கிராமங்களும், மாந்தைகிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வண்ணாங்குளம்கிராமம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாங்குளம், பேராறு கிராமங்களும், கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட உப்புமாவெளி, முள்ளியவளை மத்தி, வண்ணாங்குளம் கிராமங்களும் பாதிப்பு உள்ளாகியுள்ளன.