இனி தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்ட முடியாது! – செக் வைத்த டிஜிபி!
தமிழகத்தில் நடப்பாண்டில் 15 சதவீதம் அளவுக்கு குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட டிஜிபி சைலேந்திர பாபு, புதிய சைபர் கிரைம் அலுவலகத்தை திறந்து வைத்தார். காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய டிஜிபி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாக கூறினார்.
பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க 6 இடங்களில் செக்போஸ்ட் அமைத்துள்ளதாக கூறிய அவர், இணைய மோசடி அதிகரித்து வருவதாகவும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.