சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்… இத்தனை கோடி வருமானமா?
சபரிமலையில் கடந்த 24 நாட்களில் 125 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் பக்தர்கள் மண்டல பூஜையை ஒட்டி நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாளை (டிசம்பர் 9) மற்றும் 12ம் தேதிகளில் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஒரு லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
இதனைத்தொடர்ந்து, கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால், வரும் நாட்களில் கூட்டம் மேலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சன்னிதானத்தில் இவ்வாண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும் தரிசனம் செய்யவும், பக்தர்களுக்கு வழிபாடுகள் செய்யவும் சிரமம் ஏற்படாமல் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்த கோபன் சன்னிதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், மரகுடத்தில் இருந்து பக்தர்கள் சன்னிதானத்துக்குள் படிப்படியாக அனுமதிக்கப்படுவதாகக் கூறினார்.
சபரிமலையில் நடப்பு சீசனில் இதுவரை 125 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகக் கூறிய அவர் அரவணை பிரசாதம் அடுத்த ஆண்டு முதல் தேவசம் போர்டு சொந்தமாக தயாரிக்கும் டப்பாக்களில் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.