ஜனனி மற்றும் ஆயிஷா.! 2வது போட்டியாளரை வெளியே அனுப்பிய பிக்பாஸ் (Video)
பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கமலஹாசன் அறிவித்திருந்த நிலையில் அந்த இருவர் தற்போது வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள்.
அவர்கள் யார் என்று எதிர்பார்ப்பு மக்களிடையே எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில் 13 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் சீசன் 6 தொடர்ந்து நடந்து வருகிறது. எப்பொழுதும் பிக்பாஸ் 16 நபர்களை மட்டுமே கொண்டு ஆரம்பிக்கப்படும்.
ஆனால் இந்த முறை வித்தியாசமாக 21 போட்டியாளர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதனால் போட்டியாளர்களை வெளியேற்றுவதில் சிரமம் இருந்து வருகிறது. இந்த நிலையில் இரண்டு இரண்டு போட்டியாளர்களாக வெளியேற்றுவதற்கு பிக்பாஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
முதல் போட்டியாளராக ஜிபி முத்து தானாக முன்வந்து வெளியேறிவிட்டார். இரண்டாவதாக சாந்தி மாஸ்டர், மூன்றாவதாக அசல் கோளாறு, நான்காவது ஷெரினா, ஐந்தாவதாக விஜே மகேஸ்வரி, ஆறாவதாக நிவாஷினி, ஏழாவதாக ராபர்ட் மாஸ்டர், எட்டாவதாக குயின்சி ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
தற்போது 13 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இரண்டு போட்டியாளர்கள் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். நமது இணையதளத்திலும் எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வாக்கெடுப்பின்படி அந்த போட்டியாளர்கள் குறைவான வாக்குகளை பெற்றிருந்தனர்.
அதன்படி தற்போது ஆயிஷா மற்றும் ராம் இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் வெளியேறி இருக்கும் உறுதியான தகவல் தற்போது கிடைத்திருக்கிறது.
இந்த வாரம் அசீம், கதிரவன், ஜனனி, ஏடிகே, ஆயிஷா, ராம் என மொத்தம் ஆறு போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்தனர். வாக்கெடுப்பு தொடங்கிய நாள் முதலே ராம் மிகக் குறைவான ஓட்டுகளை பெற்றிருந்தார். அதற்கு அடுத்த இடத்தில் ஆயிஷா இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வெளியாகி இருந்த ப்ரோமோவில் ராமை வெளியேறி இருந்தார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜனனி மற்றும் ஆயிஷா இருவரும் அமர்ந்து இருக்க கார்டை காட்டுகிறார் கமல். இதில் ஆயிஷா வெளியேறி இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.