நாடாளுமன்றத் தேர்தலுக்கு அவசரப்படும் ஜே.வி.பி.! – வெளிவந்தது காரணம்.
நாடாளுமன்றத் தேர்தலை அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி வலுக்கட்டாயமாகக் கோருவதற்கான காரணத்தை தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
தற்போதைய அரசியல் களநிலவரத்தின்படி ஐக்கிய மக்கள் சக்தி முதலாமிடத்திலும், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இரண்டாமிடத்தில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (‘மொட்டு’க் கட்சி) மூன்றாமிடத்திலும் உள்ளது.
ஜே.வி.பி. இரண்டாமிடத்தில் இருந்தாலும்கூட ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஜே.வி.பிக்குமான இடைவெளி அதிகம் என்பதால் உள்ளூராட்சி சபைத் தேர்தலைவிட நாடாளுமன்றத் தேர்தலே பொருத்தமாக இருக்கும் எனக் கருதி கணக்குப் போட்டு நாடாளுமன்றத் தேர்தலையே ஜே.வி.பி. கோரி வருகின்றது என்று தென்னிலங்கை ஊடகத்தின் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.