வர்த்தகர் கொலை செய்யப்பட்ட கொடூரம் சிசிடிவியில்…
நேற்றிரவு 10.10 மணியளவில் ஹங்வெல்ல குறுக்கு வீதி பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள வர்த்தக இடத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் 48 வயதுடைய உணவக உரிமையாளர் மொஹமட் பரூஷான் படுகாயமடைந்து பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். அவர் உணவகத்தை மூடச் சென்றபோது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.