Unfair Eviciton இது.! ஜனனி ரசிகர்கள் ஆதங்கம்.! (Video)
பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்பு ஜனனிக்கு ஆதரவு பெருகத் தொடங்கியிருக்கிறது ஜனனிக்கு ஆதரவாக ட்விட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக ஜனனி வெளியேறும் போது போட்ட பயண வீடியோவை பார்க்கும் பொழுது தங்களுக்கு அழுகையாக வருவதாகவும் அப்போது கமல் கட்டிப்பிடித்து ஜனனிக்கு ஆறுதல் சொன்ன தருணம், கமல் ஒரு தந்தையாக உணர்வதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 6 இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் 30 நாட்களே மீதி இருக்கிறது. பிக்பாஸ் தொடங்கி 70 நாட்கள் எப்படி போனது என்றே தெரியவில்லை. மிக வேகமாக நாட்கள் நகர்ந்து விட்டது. இந்த நிலையில் பிக்பாஸில் இருந்து கடந்த வாரம் ஜனனி வெளியேற்றப்பட்டார்.
இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மணிகண்டன் மற்றும் ஏடிகே இருவரில் யாராவது வெளியே செல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ஜனனியை வெளியேற்றியது பிக்பாஸ்.
அதிகாரப்பூர்வ மற்ற முறையில் எடுக்கப்படும் வாக்குகளில் ஜனனி முன்னிலையில் இருந்தார். கடைசி இடத்தை மணிகண்டன் பிடித்திருந்தார். எப்பொழுதும் இதுபோல் எடுக்கப்படும் அதிகாரப்பூர்வமற்ற வகையில் எடுக்கப்படும் வாக்குகள் பெரும்பாலும் உண்மையில் பிரதிபலிக்கும்.
ஆனால் விஜய் டிவி மீது நெட்டிசன்கள் பலரும் டிஆர்பிக்காகவே இதுபோல் செய்து இருக்கிறார்கள், ஜனனியை வெளியேற்றியது முற்றிலும் தவறான செயல் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இலங்கையில் இருந்து எடுக்கப்படும் போட்டியாளர்கள் மீது தமிழக மக்களுக்கு தனிப்பட்ட பாசம் இருந்து வருகிறது. பிக்பாஸ் இது போல் செய்திருக்கக் கூடாது என்றும் கமெண்ட்களை பதிவிட்டு வந்தனர்.
ஜனனி வெளியேறிய போதும் கமலிடம் பேசும் பொழுதும் அவரைப் பார்ப்பதற்கே மிகவும் பாவமாக இருந்ததாகவும், டாப் 5 வில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜனனி வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
ஒவ்வொரு போட்டியாளரும் வெளியேறும் பொழுது பயண வீடியோவை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது பிக்பாஸ். அப்படி நேற்று பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிகபட்சமாக எட்டு நிமிடங்கள் பயண வீடியோவை ஜனனிக்காக ஒளிபரப்பியது .பயண வீடியோவை பார்த்த பலருக்கும் கண்கள் கலங்கின.
ஜனனியை பார்க்கும் பொழுதும் பாவமாக இருந்தது. அவர் கலங்கிய கண்களுடன் நின்றிருந்தார். பின்னர் ஒரு கட்டத்தில் கமலஹாசன் காலில் விழுந்து வணங்கி அவரை கட்டி அணைத்து தனது சோகத்தை வெளிப்படுத்தினார் ஜனனி.
இதை பார்த்த பலருக்கும் கண்கள் கலங்கியது. அந்த புகைப்படத்தை பதிவிடும் நெட்டிசன்கள் பலரும் ஜனனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் கமலஹாசனை பார்க்கும் பொழுது ஒரு தந்தையாக உணர்வதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜனனி வெளியேறுவது முதல் அவரது பயண வீடியோ